ADDED : ஆக 28, 2024 04:08 AM
திருமங்கலம், : வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், வழக்கறிஞர் பிரிவு சியாம் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மதுரை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவலிங்கம், துணைத் தலைவர் சரவணன், மாவட்டச் செயலாளர் சின்னச்சாமி, பொருளாதார பிரிவு மாநில செயலாளர் நிரஞ்சன், ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
புறநகர் மாவட்ட துணைத் தலைவர் செந்தில்மூர்த்தி தலைமை வகித்தார்.
ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் வீரக்குமார், வழக்கறிஞர் முருகன், நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், கருப்பு உள்ளிட்டோர் வங்கதேசத்தில் ஹிந்துக்களையும், கோயில்களையும் தாக்கப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் ராஜூ, செயலாளர் கோபாலகிருஷ்ணன், பா.ஜ., நிர்வாகிகள் ராஜாமணி, மயில்வாகனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பா.ஜ., நிர்வாகி அருண்குமார் நன்றி கூறினார்.