/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே ஸ்டேஷனில் ஓட்டல்: ரயில்வே பயணிகள் எதிர்பார்ப்பு
/
ரயில்வே ஸ்டேஷனில் ஓட்டல்: ரயில்வே பயணிகள் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனில் ஓட்டல்: ரயில்வே பயணிகள் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனில் ஓட்டல்: ரயில்வே பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 21, 2024 06:46 AM
மதுரை : தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொது செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் 1ல் ரயில்வே சார்பில் நடத்தும் ஓட்டல் உள்ளது.
இங்கு மதியம் அளவு சாப்பாடு ரூ.130, கூடுதல் ஒரு பிளேட் ரூ.20க்கும், டிபன் 2 இட்லி ரூ.70, வடை ரூ.20, பொங்கல் ரூ.80, பூரி ரூ.70 என விமான நிலையம் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் தங்களுக்கேற்ற விலையில் உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர். மதிய உணவுக்காக அலைந்து திரிகின்றனர்.
மதுரை ஸ்டேஷனில் தற்போது ஒரே ஒரு ஓட்டல் செயல்படுகிறது. ஓட்டல் வசதி ஏற்படுத்தி, சாதாரண மக்களும் பயன்படுத்தும் அளவில் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்ய வேண்டும்.
மதுரை 1வது பிளாட்பார்மில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து செல்கின்றன. பாண்டியன், வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்களும் இயக்கப்படுகின்றன. எனவே இங்கு கூடுதல் ஓட்டல்கள் அமைக்க வேண்டும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் முன்பதிவில் குறிப்பிட்டால் மட்டுமே உணவு தரப்படுகிறது என கேட்டரிங் ஊழியர்கள் கூறுகின்றனர். இதில் மாற்றம் கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

