/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கோவை சிறையில் தாக்கியதால் எனக்கு எலும்பு முறிவு' ; மதுரை சிறைக்கு மாற்றுங்கள் என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கதறல்

ADDED : மே 09, 2024 08:43 AM

மதுரை : 'கோவை சிறையில் என்னை போலீசார் தாக்கியதால் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்' என கஞ்சா வழக்கில் கைதாகி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யூ டியூப்பர் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் முறையிட்டார்.
சென்னையை சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரியான சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், கோவை போலீசாரால் மே 5 ல் தேனியில் கைது செய்யப்பட்டார். அவரது காரில் கஞ்சா இருந்ததாக உடன் தங்கியிருந்த ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு கைது செய்யப்பட்டனர். சங்கரும் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் நேற்று அவரை மதுரை போதை பொருட்கள் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் ஆஜர்படுத்தினர். அப்போது சங்கர் வலது கையில் கட்டுப்போட்டிருந்தார். நீதிபதியிடம் சங்கர் இது பொய் வழக்கு. கோவை சிறையில் என்னை போலீசார் கடுமையான தாக்கினர். இதில் எனக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி, 'உங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்தால் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்' எனக் கூறி மே 22 வரை நீதிமன்ற காவலில் சங்கரை அடைக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
துடைப்பத்துடன் போராட்டம்
சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம் நடத்த துடைப்பத்துடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை நீதிமன்ற பிரதான வாயிலில் கூடினர். போலீஸ் உதவி கமிஷனர்கள் காமாட்சி, ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சங்கரை போலீசார் வேனில் அழைத்துச் சென்றபோது துடைப்பத்தை காட்டியும், வீசியும் பெண்கள் கோஷமிட்டனர்.