/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவதுாறு பரப்பினால் வழக்கு... ஆதாரம் இருக்கு சந்திக்க தயார்... மதுரையில் மா.கம்யூ., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் மோதல்

ADDED : ஏப் 05, 2024 05:56 AM
மதுரை : தொகுதி நிதியை முறையாக செலவழிக்கவில்லை என மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டிய நிலையில் அவதுாறு பரப்பினால் வழக்கு தொடருவேன் என வெங்கடேசன் எச்சரித்துள்ளார். 'ஆதாரம் இருக்கு. வழக்கு தொடர்ந்தால் சந்திப்பேன்' என சரவணன் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் 'சிட்டிங்' மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். 'வெங்கடேசன் தனது எம்.பி., நிதி ரூ.17 கோடி ஒதுக்கீட்டில் ரூ.5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார்' என சரவணன் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த வெங்கடேசன், 'இது சந்தர்ப்பவாத அரசியல். ரூ.17 கோடியில் ரூ.16.96 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அவதுாறுகளை நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருந்தார்.
நேற்று அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமையில் யானைமலை, கொடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சரவணன் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெங்கடேசன் என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை நான் வரவேற்கிறேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பார்லிமென்ட் தந்த தகவல்களையே தெரிவித்தேன். வெங்கடேசன் முறையாக நிதியை பயன்படுத்தவில்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு அவர் பெயரெடுத்துக் கொள்கிறார்.
பொதுவாக எம்.பி.,க்கு 5 ஆண்டுகளில் ரூ.25 கோடி தொகுதி நிதி வழங்கப்படும். கொரோனா காலகட்டம் என்பதால் ரூ.17 கோடி வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருக்கும் வெங்கடேசன் ரூ.4.34 லட்சம் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். மீதமுள்ள ரூ.12 கோடிக்கு என்ன பணிகளை செய்துள்ளார் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார்.
இதற்கிடையே 'எக்ஸ்' தளத்தில் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், 'சரவணன் வெளியிட்ட ஆதாரங்கள் எனக்கான சாட்சியங்கள்' என தெரிவித்துள்ளார்.