sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

2024ல் பா.ஜ., விஸ்வரூபம் எடுக்கும்

/

2024ல் பா.ஜ., விஸ்வரூபம் எடுக்கும்

2024ல் பா.ஜ., விஸ்வரூபம் எடுக்கும்

2024ல் பா.ஜ., விஸ்வரூபம் எடுக்கும்


ADDED : மார் 26, 2024 07:10 AM

Google News

ADDED : மார் 26, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : மேலுாரில் பா.ஜ., வேட்பாளர் அறிமுக கூட்டம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

அறிமுக கூட்டத்திற்கு கட்சி அலுவலகத்திற்கு வந்த பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீனிவாசனுக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அவர்பேசுகையில் : தி.மு.க, என்ற தீய சக்தியை அழிக்க அதி.மு.க., கூட்டணியை விரும்பினோம். ஆனால் தமிழகத்தில் சொந்தகாசில் சூனியம் வைத்து கொண்ட தலைவர் என்றால் அது பழனிசாமி தான். பா.ஜ., கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் இனி எப்போதும் அவர் ஜெயிக்கப் போவதில்லை. 2024ல் விஸ்வரூபம் எடுக்கும் கட்சியாக பா.ஜ., இருக்கும். வைகையில் 15 அடிக்கு மணல்தான் உள்ளது. அதை துார்வார எம்.பி., வெங்கடேசன் முயற்சி எடுக்கவில்லை.

அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் தேர்தல் முடியும் வரை அ.தி.மு.க., வில் இருக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போதே கட்சி மாறுபவர் சரவணன். அவர் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் விமானத்தில் செல்லும் போது கட்சி மாறிவிடுவார். மேலுார் தொகுதியில் பா.ஜ.,வை அதிக ஓட்டுக்கள் பெற வைக்க வேண்டும் என்றார்.

மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மாவட்ட பொது செயளாலர் கண்ணன், நகர் தலைவர் சேவுகமூர்த்தி நிர்வாகி தர்மலிங்கம், அ.ம.மு.க., நிர்வாகி சரவணன், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us