ADDED : மே 15, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் சவுராஷ்டிரா சமூகநலப் பேரவை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் முன்னாள் தலைவர் சி.கே.சேகர், ஜீயர்பாபு, வருமான வரித்துறை உதவிகமிஷனர் கே.ஆர்.சதீஷ்பாபு பங்கேற்றனர்.
தலைவராக எஸ்.கே. ஆர்.ரமேஷ், செயலாளராக பி.எம்.முரளி, பொருளாளராக எஸ்.எஸ்.கிேஷாரிலால் பொறுப்பேற்றனர். பொது தேர்வில் பள்ளி முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிர்வாகிகள் கே.கே.குபேந்திரன், சந்திரகலா, விஜயசங்கர், எஸ்.கே.பி.சந்திராபிரகாஷ், ஜே.பி.சரவணன், எம்.ஆர்.சுரேந்திரன் கலந்து கொண்டனர்.

