/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிப்பு; அப்போலோ டாக்டர்கள் கவலை
/
தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிப்பு; அப்போலோ டாக்டர்கள் கவலை
தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிப்பு; அப்போலோ டாக்டர்கள் கவலை
தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிப்பு; அப்போலோ டாக்டர்கள் கவலை
ADDED : ஏப் 11, 2024 05:47 AM
மதுரை : இந்தியாவில் தொற்றா நோய்கள் மற்றும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக அப்போலோ டாக்டர்கள் கவலை தெரிவித்தனர்.
இது குறித்து மதுரை அப்போலோ மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் நீலக்கண்ணன் கூறியதாவது: இந்தியாவில் தொற்றா நோய், புற்றுநோய் பாதிப்புகள்அபாய கட்டத்தை எட்டியுள்ளது. புற்றுநோயின்தலைநகரமாக இந்தியா மாறும் நிலை உள்ளது.
தொற்றா நோய்களான புற்றுநோய், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்றவற்றின் அதிகரிப்பை தவிர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.புற்றுநோயை கண்டறிவது குறைவாக இருக்கிறது. இதனால் இந்நோய் பரிசோதனைக்கு வருவோர்எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையும் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீரழிவு பரிசோதனை செய்ய வருவோருக்கு3ல் ஒருவருக்கு இந்நோய் உள்ளது.
இதுபோல மனநலப்பரிசோதனைக்கு வருவோரில் 10ல்ஒருவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். எனவே, மனநல பயிற்சி,விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியமும் ஏற்பட்டு உள்ளது. பெண்களுக்கு மார்பகம், கருப்பை வாய் மற்றும் கருப்பைபுற்றுநோய்கள் அதிகமாக உள்ளது.
அதேவேளை ஆண்களுக்கு நுரையீரல், வாய்மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் காணப்படுகிறது.
இவற்றை தவிர்க்க தடுப்பு மருத்துவத்தில் புதுமை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சுகாதார வசதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அப்போலோ மருத்துவமனையில் அறிவுசார் தொழில்நுட்பம், தீவிர பரிசோதனை முயற்சிகள் மூலமாக ஒவ்வொருவருக்கும் சிறந்த மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்றனர்.
மதுரை மண்டல உயர் செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜன், மருத்துவ ஆலோசகர் தீலிபன், பொது மேலாளர்கள்மணிகண்டன், கற்பகவல்லி உடனிருந்தனர்.

