/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண்களின் நிரந்தர வருமானத்திற்கு 'மண்ணில்லா விவசாயத் திட்டம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
/
பெண்களின் நிரந்தர வருமானத்திற்கு 'மண்ணில்லா விவசாயத் திட்டம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
பெண்களின் நிரந்தர வருமானத்திற்கு 'மண்ணில்லா விவசாயத் திட்டம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
பெண்களின் நிரந்தர வருமானத்திற்கு 'மண்ணில்லா விவசாயத் திட்டம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
ADDED : செப் 13, 2024 05:33 AM

மதுரை: 'தற்கொலை இழப்பால் பாதித்த பெண்களுக்கு மண்ணில்லா விவசாயத் திட்டம் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கச் செய்யலாம்' என அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி அருகே எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம், மும்பை மரிவாலா நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.
அறக்கட்டளை சார்பில் 22 ஆண்டுகளாக மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியம், நத்தம் பகுதிகளில் கிராமிய மனநல மறுவாழ்வு திட்டத்தின்கீழ், மனநல விழிப்புணர்வு, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பொன்ராஜ் பேசியதாவது: கிராமங்களில் தற்கொலை சம்பவங்களால் 595 குழந்தைகள் பாதித்துள்ளனர். அவர்களை படிக்க வைக்க, திருமணம் செய்து கொடுக்க முடியாமல் அவதிப்படும் பெண்கள் பலர் உள்ளனர். கிராமங்களில் நகர்புற வசதி வழங்கும் அப்துல் கலாமின் 'புரா' திட்டத்தில் 'திறன்மிகு கிராமம்' எனும் திட்டம் உள்ளது.
அதிலுள்ள 'மண்ணில்லா விவசாய திட்டத்தில்' அரசு வழங்கும் மானியம் மூலம் விதைகளை தேர்வு செய்து உற்பத்தியை பெருக்கலாம். பல்லடுக்கு விவசாயம் மூலம் அதிக மகசூல் தரும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.12 லட்சம் வரை அதன் விளைச்சல் இருக்கும். இதற்காக சுயஉதவிக் குழுவை ஏற்படுத்தி, பெண்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கச் செய்யலாம் என்றார்.
கிராமிய மனநல மறுவாழ்வு திட்டத் தலைவர் கூடலிங்கம், சோலார் பவர் இந்தியா நிறுவனர் நாகேந்திரன், கலாம் விஷனரி உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் அனுசுயா நன்றி கூறினார். அறக்கட்டளை இயக்குனர் ஜனார்த்தன பாபு ஒருங்கிணைத்தார்.

