நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லுாரியில் நாட்டு நலப் பணித் திட்டம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடந்தது.
மதுரை துணை மேயர் நாகராஜன் தமிழின் தொன்மை குறித்து பேசினார். கவிஞர் மூ.ரா மாணவர்களுக்கு நாட்டு நலப் பணித் திட்டத்தின் மூலம் கற்க வேண்டியவற்றை எடுத்துரைத்தார். துணை முதல்வர் சுப்புலட்சுமி, இணைப் பேராசிரியர் வேணுகா முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் செல்வத்தரசி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்களாக இணைப் பேராசிரியர் பூங்கோதை, நேருஜி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அலுவலர் கோகிலா நன்றி கூறினார். அதிவீரபாண்டியன் தொகுத்து வழங்கினார்.