/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
53 விளையாட்டுகளில் பங்கேற்க அழைப்பு
/
53 விளையாட்டுகளில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 22, 2024 03:02 AM
மதுரை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தாண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோர் 5 பிரிவுகளில் 53 வகை விளையாட்டுகளில் பங்கேற்க www.sdat.tn.gov.inல் ஆக.25 வரை பதிவு செய்யலாம்.
தற்போது இப்பதிவை எளிமையாக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வீரர்கள் தங்கள் பெயர், பிறந்ததேதி, அலைபேசி எண், விளையாட்டு பிரிவு வகை, முகவரி, வசிக்கும் மாவட்டம், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து, ஆதார் கார்டை மட்டும் இணைக்க வேண்டும்.
மேலும் இறகுப்பந்து, மேஜை பந்து, டென்னிஸ் விளையாட்டுகளில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு ஆகிய 2 லும் பதிவு செய்யலாம். பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பயில்வோரும் பதிவு செய்யலாம்.