/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொஞ்சம் அசந்தா விபத்துதான்; நடுங்கும் நாவினிப்பட்டி சந்திப்பு
/
கொஞ்சம் அசந்தா விபத்துதான்; நடுங்கும் நாவினிப்பட்டி சந்திப்பு
கொஞ்சம் அசந்தா விபத்துதான்; நடுங்கும் நாவினிப்பட்டி சந்திப்பு
கொஞ்சம் அசந்தா விபத்துதான்; நடுங்கும் நாவினிப்பட்டி சந்திப்பு
ADDED : ஏப் 24, 2024 06:25 AM

மேலுார் : மேலுாரில் ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தினமும் விபத்து அதிகரித்து வருகிறது.
மேலுார்- - காரைக்குடி செல்லும் ரோடும், சென்னையில் இருந்து மேலுாருக்குள் செல்வதற்கான சர்வீஸ் ரோடும் நாவினிப்பட்டியில் சந்திக்கிறது. இச்சந்திப்பில் போக்குவரத்து விதிகள் கடை பிடிக்காததால் தினமும் விபத்து ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர் சம்சுதீன்: ரோடுகள் சந்திக்கும் இடத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முட்செடிகள் வளர்ந்துள்ளன.
ஓட்டல் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் சர்வீஸ் ரோடு சந்திப்பு அருகில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. உயர் மின் கோபுர விளக்கு இல்லாமல் இருட்டாக இருப்பதால் சமூகவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பாக அமைகிறது என்றார்.
ஊராட்சி தலைவி தவுலத்பீவி கூறுகையில், ''நான்கு வழிச்சாலையை பராமரிக்கும் தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஊராட்சி சார்பில் அகற்ற ஏற்பாடு செய்யப்படும் என்றார்.