/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேட போட்டி
/
பள்ளிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேட போட்டி
ADDED : ஆக 22, 2024 06:07 PM
மதுரை: ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரை எஸ் எஸ் காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் உள்ள மகா பெரியவா கோவிலில், எல்கேஜி முதல் 2ஆம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மாறுவேட போட்டி நடக்கிறது.
ஒரு பள்ளியிலிருந்து எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் கிருஷ்ணர் வேடமிட்டு பங்கேற்கலாம். பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும். பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிலிருந்தே கிருஷ்ணர் வேடமிட்டு நேரடியாக அழைத்து வரவேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நெல்லை பாலு செய்துள்ளார். தொடர்புக்கு: 9442630815