/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிருஷ்ண ஜெயந்தி விழா மதுரையில் கோலாகலம்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா மதுரையில் கோலாகலம்
ADDED : ஆக 29, 2024 05:33 AM
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
ஓய்வுபெற்ற எஸ்.ஐ., சந்திரசேகரன் தலைமை வகித்தார். விஸ்வகர்மா சங்கத் தலைவர் பாண்டித்துரை முன்னிலை வகித்தார். ராமகிருஷ்ண குழுவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
கோயிலின் ஸ்தானிகஅர்ச்சகர் பாலாஜி, கிருஷ்ணரின் மகிமைகள்,லீலைகள், கீதையின் மகத்துவம் குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார். கிருஷ்ணருக்கு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இயக்கத்தின் மாநிலத் தலைவர் தெய்வ பிரகாஷ், துணைத் தலைவர் சுந்தர வடிவேல், பொருளாளர் ஆதிசேஷன், மாவட்டத் தலைவர் பொன்னுசாமி, பொதுச் செயலாளர் வாசுதேவன், துணைத் தலைவர் குமார், செயலாளர் கோபால், கோயில் அமைப்பாளர் கமலம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.

