
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: கூத்தியார்குண்டு அகத்தியர் விநாயகர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆக.,25ல் விக்னேஸ்வர பூஜை, நவகிரகபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று காலை யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, புனித நீர் குடங்கள் புறப்பாடாகின. மூலவர்கள் அகத்தியர் விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோபுரம், வள்ளி, தெய்வானை, முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவகிரகங்கள், சூரியன், சந்திரன், நடராஜர், கால பைரவர் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம்,தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.