/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
285 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
/
285 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
ADDED : மே 02, 2024 05:36 AM
மதுரை: மே தினமான நேற்று கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.
பணியில் ஈடுபடுத்த விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் படிவம் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிகளுக்கு முரணாக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய மதுரை மாவட்டத்தில் 114 நிறுவனங்கள், ராமநாதபுரம் 34, சிவகங்கை 40, விருதுநகரில் 97, மொத்தம் 285 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

