ADDED : ஆக 26, 2024 07:03 AM

மதுரை: மதுரை அண்ணாநகரில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாடு நடந்தது.
சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ., வரவேற்றார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொருளாளர் ரவி, இணைச் செயலாளர் கிரிஜா, சி.ஐ.டி.யூ.,  செயலாளர் லெனின் பேசினர்.
காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கூட்டுப் பேர உரிமையை மீட்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச் செயலாளர் ரமேஷ்கண்ணன் நன்றி கூறினார். முன்னதாக நடந்த ஊர்வலத்தில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

