ADDED : ஆக 15, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : சிவகங்கையை சேர்ந்தவர் விக்னேஷ் 29. மதுரை அண்ணாநகரில் 2014 மே 25 ல் இவரது நண்பரின் திருமணம் நடந்தது.
இதற்காக மே 24 ல் மதுரை வந்த விக்னேஷ் ஒரு ஓட்டலில் தங்கினார். அவரை மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த நண்பர் சுரேந்திரன் 38, சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மே 25ல் விக்னேைஷ கத்தியால் குத்தி கொலை செய்ததாக சுரேந்திரன் உட்பட சிலர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய்: சுரேந்திரன், கோரிப்பாளையம் முத்துகுமார் 46, தல்லாகுளம் முத்துக்கிருஷ்ணனுக்கு 38, ஆயுள் தண்டனை, தல்லாகுளம் கவுதம் 30, வினோத் 31, காளியப்பனுக்கு 64, தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.