/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொதுப்பணித்துறை வளாகத்திற்குள் மது பாட்டில்கள்
/
பொதுப்பணித்துறை வளாகத்திற்குள் மது பாட்டில்கள்
ADDED : மே 07, 2024 05:40 AM

மதுரை: மதுரை தல்லாகுளம் பொதுப்பணித் துறை வளாகத்திற்குள் ஆங்காங்கே குப்பை குவித்து எரிக்கப்படுவதோடு காலி மது பாட்டில்களும் வீசப்பட்டுள்ளன.
இங்கு சேரும் குப்பையை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் பழக்கமே இல்லை. குப்பைத்தொட்டியும் இல்லை என்பதால் ஆங்காங்கே அந்தந்த பிரிவுகளில் சார்பில் சேரும் குப்பையை மூலையில் வைத்து எரிக்கின்றனர். எல்லா இடங்களிலும் குப்பையை எரித்த தடமாக உள்ளது. சுத்தம் செய்து அகற்றுவதே இல்லை.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் பின்பக்க பகுதியில் காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ளன. இரவில் சமூக விரோதிகள் மது குடித்து பாட்டில்களை வீசி சென்றார்களா எனத் தெரியவில்லை. குப்பையை முறையாக சுத்தம் செய்வதோடு கண்காணிப்பையும் பலப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.