ADDED : மே 04, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் பொறியியல் கல்லுாரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி கிராமங்களில் நடந்தது. ஊராட்சித் தலைவர்கள் ஹேமா, குமரன் தலைமை வகித்தனர். முதல்வர் வரதவிஜயன் முன்னிலை வகித்தார்.
இரண்டு கிராமத்தில் உள்ளவர்களுக்கு மாணவர்கள் எழுத, படிக்க கற்று கொடுத்தனர். பின்னர் மக்கள் கூடும் இடங்களை சுத்தம் செய்தனர். பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில் செயல் அலுவலர்கள் முத்துமணி, மீனாட்சிசுந்தரம், காந்திநாதன், பி.ஆர்.ஓ., பிரபாகரன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ராஜ் பிரகாஷ் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தார்.