/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை தி.மு.க., நிர்வாகி நியமனம்; விக்கிரவாண்டி பிரசாரம் புறக்கணிப்பு
/
மதுரை தி.மு.க., நிர்வாகி நியமனம்; விக்கிரவாண்டி பிரசாரம் புறக்கணிப்பு
மதுரை தி.மு.க., நிர்வாகி நியமனம்; விக்கிரவாண்டி பிரசாரம் புறக்கணிப்பு
மதுரை தி.மு.க., நிர்வாகி நியமனம்; விக்கிரவாண்டி பிரசாரம் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 08, 2024 12:25 AM
மதுரை : மதுரையில் புதுார் தி.மு.க., பகுதி செயலாளராக புண்ணியமூர்த்தி நியமிக்கப்பட்டார். இதை அறிந்து அப்பதவிக்கு காய் நகர்த்திய மதுரை நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் புறக்கணித்து மதுரை திரும்பினர்.
புதுார் பகுதி செயலாளராக கிறிஸ்டி ஜீவகன் இருந்தார். அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதால் கைதானார். இதனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இப்பதவியை பெற நகர் செயலாளர் தளபதி மூலம் மதுரை நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் புண்ணியமூர்த்தி புதுார் பகுதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கட்சியில் பகுதி, ஒன்றியம் போன்ற பதவிகள் மாவட்ட செயலாளர் பரிந்துரைப்படி தான் நியமிக்கப்படுவர். இதனால் பலர் இப்பதவியை பெற முயற்சி செய்தனர். இதில் 'பலம்' வாய்ந்த மூன்று நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதியின் நேரடி சிபாரிசால் புண்ணியமூர்த்தி நியமிக்கப்பட்டார். இத்தகவல் அறிந்து விக்கிரவாண்டியில் தளபதியுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகள் அதிருப்தியை தெரிவித்தனர். அதையடுத்து பிரசாரத்தை புறக்கணித்துவிட்டு மதுரை திரும்பிவிட்டனர்.
புண்ணியமூர்த்தி கூறுகையில் இளைஞரணியில் இருந்தபோது எனது செயல்பாடுகளை பார்த்து அமைச்சர் உதயநிதியால் இப்பதவி கிடைத்தது. அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவேன் என்றார்.