/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு தீ வைப்பு; கண்காணிப்பு கேமரா, போலீஸ் இல்லாததால் மர்மநபர் கைவரிசை
/
மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு தீ வைப்பு; கண்காணிப்பு கேமரா, போலீஸ் இல்லாததால் மர்மநபர் கைவரிசை
மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு தீ வைப்பு; கண்காணிப்பு கேமரா, போலீஸ் இல்லாததால் மர்மநபர் கைவரிசை
மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு தீ வைப்பு; கண்காணிப்பு கேமரா, போலீஸ் இல்லாததால் மர்மநபர் கைவரிசை
ADDED : மே 14, 2024 06:27 AM

மதுரை : மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர் தீ வைத்ததில் இரு டூவீலர்கள் கருகின. கண்காணிப்பு கேமரா, போலீஸ் இல்லாததால் மர்மநபரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை விஸ்வநாதபுரத்தில் வாடகை கட்டடத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல், விற்பனை குறித்து விசாரித்து வருகிறது.
நேற்றுமுன்தினம் அதிகாலை 12:00 மணியளவில் மர்மநபர் ஒருவர், இந்த அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு 'பறிமுதல் டூவீலர்கள்' மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அவை கருகின.
அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அருகில் வசிப்பவர்கள் தீயை அணைத்தனர். கண்காணிப்பு கேமராவும் இல்லை. எதிரேயுள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் மர்மநபர் வந்து சென்றது பதிவாகி உள்ளது.
எரிந்த டூவீலர்கள் கடந்த பிப்ரவரியில் மதுரை அண்ணாநகரில் ரூ.5 கோடி மதிப்புள்ள மெத்தப்பெட்டமைன் என்ற போதை பொருளை வீட்டில் பதுக்கிய வழக்கில் கைதான தமீன் அன்சாரி மற்றும் அவரது கூட்டாளியினுடையது.
வழக்கை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு டூவீலர்களுக்கு தீ வைக்கப்பட்டதா அல்லது வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் போலீசாரை எச்சரிக்கும் வகையில் தீ வைத்தார்களா என விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமரா, போலீஸ் இல்லாததால் மர்மநபரை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது.
அரசுக்கு வீண் செலவு
மதுரை நகரில் இதுபோன்ற சிறப்பு போலீஸ் பிரிவுகள் சில வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன.
அதற்கு வாடகை, பராமரிப்பு என அரசுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. பழைய கமிஷனர் அலுவலகத்தில் பல அறைகள் காலியாக இருக்கின்றன.
அங்கு தற்போது தீவிர குற்றத்தடுப்பு பிரிவு இயங்குகிறது. இதுபோல் இதர சிறப்பு பிரிவுகளையும் அங்கு மாற்றலாம். அல்லது அருகில் உள்ள, யாசகம் கேட்போர் ஓய்வுஎடுக்கும் இடமாக வீணாக மாறியுள்ள பழைய எஸ்.பி., அலுவலகத்திற்கு சிறப்பு பிரிவுகளை மாற்றலாம். இதன்மூலம் அரசுக்கு வீண் செலவு தடுக்கப்படும். மாதம் ரூ.பல லட்சம் செலவு மிச்சமாகும்.

