ADDED : பிப் 22, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மஹாபெரியவரின் அனுஷ உற்ஸவம் எஸ்.எஸ். காலனியில் நடந்தது.
மஹாபெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப்பாதுகைக்கு திருமஞ்சனம் ரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. ருத்ரா அபிஷேகம் நடந்தது.
சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்தனர். அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.