ADDED : செப் 12, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் இருந்து மாணிக்க வாசகர் மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவிற்காக மதுரை வந்தார். இன்று (செப். 12) நரியை பரியாக்கிய லீலை, செப்.13ல் மதுரை புட்டுத்தோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நடக்கிறது.
செப். 14 ல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியுடன் மாணிக்கவாசகர் கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பிறகு செப்.15, 16 மீனாட்சி சுந்தரேசுவரருடன் திருவீதி உலா மற்றும் விடை பெற உள்ளார். பிறகு பல்வேறு மண்டபகபடிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி செப். 21 ல் மாணிக்கவாசகர் கோயிலை வந்தடைகிறார்.

