/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்ச் 18ல் மீனாட்சி கோயில் நடைதிறப்பு இல்லை
/
மார்ச் 18ல் மீனாட்சி கோயில் நடைதிறப்பு இல்லை
ADDED : மார் 01, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்ஸவம் மார்ச் 18 ல் நடக்கிறது.
இதற்காக அன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்ஸவத்தில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு கோயிலுக்கு திரும்புவார்கள். அந்நாளில் அதிகாலை 4:00 மணி முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு திரும்பும் வரை நடைசாத்தப்பட்டிருக்கும்.
கோயிலின் ஆயிரங்கால் மண்டபம், ஆடிவீதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.