/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஆக 29, 2024 05:32 AM
மதுரை: மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார்.முதல்வர் ராம்பிரசாத் வரவேற்றார்.
பொருளாளர் சிவபிரசாத், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பேராசிரியர் சதீஸ்குமார் பேசினர்.சுவிட்சர்லாந்தின் 'தி புரொப்பல் லேப்' இணை நிறுவனர் விஜய் ஆனந்த் ராஜூ பேசுகையில், ''ஒவ்வொரு மாணவரும் அறிவோடு பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதை செயலாக்கம் செய்யும் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமையை கடைபிடிப்பதுடன், நல்ல நட்பையும் வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உயரலாம்'' என்றார். பேராசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

