/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரத்திக்கு பணம்: எம்.பி., மீது வழக்கு
/
ஆரத்திக்கு பணம்: எம்.பி., மீது வழக்கு
ADDED : ஏப் 06, 2024 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : மதுரை லோக்சபா தொகுதி மா.கம்யூ., வேட்பாளர் எம்.பி., வெங்கடேசன் ஏப்.3 ல் எம்.வெல்லாளபட்டியில் ஓட்டு சேகரித்தார்.
அவர் சென்ற பிறகு அப்பகுதியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர் கொட்டாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மேலுார் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று எம்.பி., மற்றும் அவரது கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

