ADDED : ஆக 09, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
மேலுார்: எ.கோவில் பட்டியில் அழகி ஆத்தாள், நெவுலிநாதன், அய்யனார், பெருமாள் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு தன்னுாற்று கண்மாயில் மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
