ADDED : மார் 28, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊமச்சிகுளம்: காஞ்சரம்பேட்டை அருகே சின்னப்பட்டியில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 19ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. மார்ச் 25ல் செல்வ விநாயகர் கோயிலில் பொங்கல் வைத்தலும், பின் குதிரை கண் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
மார்ச் 26ல் இரவு குதிரை எடுப்பு, அம்மன் ஊர்வலம், வான வேடிக்கை நடந்தது. பின் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபட்டனர். மார்ச் 27 ல் முத்தாலம்மன் வாண வேடிக்கையுடன் பூஞ்சோலை சென்று சேர்ந்தது. இரவு முத்தாலம்மன் நாடகம் நடந்தது.