/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வக்பு வாரிய இடத்தை அரசு கையகப்படுத்த முயற்சி நவாஸ்கனி எம்.பி., குற்றச்சாட்டு
/
வக்பு வாரிய இடத்தை அரசு கையகப்படுத்த முயற்சி நவாஸ்கனி எம்.பி., குற்றச்சாட்டு
வக்பு வாரிய இடத்தை அரசு கையகப்படுத்த முயற்சி நவாஸ்கனி எம்.பி., குற்றச்சாட்டு
வக்பு வாரிய இடத்தை அரசு கையகப்படுத்த முயற்சி நவாஸ்கனி எம்.பி., குற்றச்சாட்டு
ADDED : ஆக 16, 2024 04:26 AM
அவனியாபுரம்:' ''வக்பு வாரிய நிலத்தை கையகப்படுத்தவே அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது'' என இந்திய யூனியன் முஸ்லீம்லீக் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
லோக்சபாவில் வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டபோது அதில் எங்களுக்கான பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறினோம். வாரியத்தின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கும் பணிகள் ஒரு புறம் நடக்கிறது. அதேசமயம் ஆக்கிரமித்து உள்ளவர்களிடம் இடத்தை ஒப்படைக்கும் விதமாக இந்த சட்ட திருத்தம் உள்ளது.
வக்பு வாரியத்திற்கு 9 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதை அரசாங்கம் கையகப்படுத்தவே இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு வக்பு வாரியத்தில் 11 உறுப்பினர்கள் உள்ளோம். இதில் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினராக்கினால் அது குழப்பத்தை உண்டாக்கும்.
பள்ளிவாசலுக்குள் செல்வது, அவற்றை ஆய்வு செய்வதெல்லாம் ஒரு இஸ்லாமியர்தான் செய்ய முடியும். அதனால் கடுமையாக எதிர்த்து உள்ளோம்.
விளையாட்டு வீரர்கள் தேர்வில் பெரியளவில் அரசியல் நடக்கிறது. திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் பணியை மத்திய அரசு செய்யவில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்போதை கலாசாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முதல்வர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்கிறார் என்றார்.

