/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எனக்கு தொடர்பில்லை: இயக்குநர் அமீர் பேட்டி
/
எனக்கு தொடர்பில்லை: இயக்குநர் அமீர் பேட்டி
ADDED : ஏப் 11, 2024 06:50 AM

மதுரை : என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
மதுரை தமுக்கத்தில் ரம்ஜான் தொழுகையில் பங்கேற்ற அவர் கூறியதாவது: என் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 11 மணி நேரம் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். என்ன ஆவணங்கள் என அதிகாரிகள் தான் தெரிவிக்க வேண்டும். எந்த விசாரணைக்கும் நான் தயார்.
சோஷியல் மீடியாக்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அதை நிரூபிப்பேன். சோதனையில் உள்நோக்கம் உள்ளதா என உறுதியாக சொல்ல முடியாது. இது பற்றி ஒருநாள் நிச்சயம் பேசுவேன். விசாரணை நிலுவையில் உள்ளதால் தற்போது பேசினால் சிக்கலாகும். நேர்மையாக விசாரணை நடக்கிறது என்றார்.

