ADDED : செப் 08, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மாவட்டம், வலையங்குளத்தைச் சேர்ந்தவர் கலாம் காளி, 29. கஞ்சா வழக்கில் 14 ஆண்டுகள் தண்டனை பெற்று மதுரை சிறையில் இருந்தார்.
இவரது சகோதரி மகள் காதுகுத்துக்கு தாய்மாமன் என்ற முறையில் பங்கேற்க பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும்என, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு செய்தார்.
செப்., 5 முதல் 7ம் தேதி வரை பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, செப்., 5ம் தேதி மதியம் மதுரை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து பரோலில் சென்றார். நேற்று சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும்.
ஆனால், நேற்று அதிகாலை வலையங்குளத்தில் தன் வீட்டில் இருந்து, 'எஸ்கேப்' ஆனார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.