ADDED : செப் 14, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் எஸ்.பி தேவநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை தெற்கு தெரு, பேரையூர் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் வழியாக பேரையூர் மேல பரங்கிரி சுப்பிரமணியசாமி கோயிலில் உள்ள சரவணப் பொய்கையில் சிலையை கரைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட குற்ற பதிவேடு டி.எஸ்.பி சிவா, தாசில்தார் முகிபாலன், டி.கல்லுப்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சீனிவாசன் பங்கேற்றனர்
