/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு
/
பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு
பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு
பட்டாசு வெடித்தால் அபராதம்; மலைப்பட்டி மக்கள் கட்டுப்பாடு
ADDED : ஆக 09, 2024 01:09 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் ஊர்வலங்களின் போது பட்டாசு வெடித்துச் செல்வதால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. வெடித்து சிதறி காயம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பவர்கள் உறவினர்களாக இருப்பதால் போலீசில் புகாரும் கொடுப்பதில்லை.
போத்தம்பட்டி ஊராட்சி மலைப்பட்டியில் சில மாதங்களுக்கு முன்பு விசேஷ வீட்டுக்கு பட்டாசு வெடித்துச் சென்ற போது எதிர்பாராத விதமாக ஒச்சம்மாள் 60, என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதனால் கவலையடைந்த கிராமத்தினர் ஆலோசனை நடத்தினர். பட்டாசு வெடித்துச் செல்வதால் பணவிரயமும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அதனால் கிராமத்திற்குல் விசேஷ நிகழ்வுகளின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது என முடிவு செய்தனர். இந்த முடிவை ஊருக்குள் நுழையுமிடத்தில், மலைப்பட்டி கிராமத்தில் பட்டாசோ, வாணவெடியோ வெடிக்கக் கூடாது. மீறினால் அபராதம் விதிப்பதுடன் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனர்.