ADDED : ஆக 15, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ., இளைஞரணி தலைவர் சுஜின்ராஜ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஆக.,15) குலசேகரம்- தக்கலை, அருமனை- கல்லுதொட்டி உட்பட 6 இடங்களில் பா.ஜ., சார்பில் டூவீலர்களில் ஊர்வலம் செல்ல அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அவசர வழக்காக நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி நாளை (ஆக.,16) ஒத்திவைத்தார்.