ADDED : ஆக 13, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கப்பலுாரில் விதிமீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை டோல்கேட் எதிர்ப்பு குழுவினர், திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள்நடத்தி வரும் நிலையில் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனு அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் எதிர்ப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், விதிமுறைகளை மீறி 1.5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள டோல்கேட்டை அகற்றவும், வாகன ஓட்டிகளுக்கு ரூ. 2 லட்சம்முதல் ரூ.22 லட்சம் வரை அனுப்பியுள்ள அபராத நோட்டீஸ்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கூறியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் முகவரிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பியுள்ளனர்.

