மருத்துவமனையில் திருடியவர்கள் கைது
மதுரை: அரசு மருத்துவமனையின் ஸ்கேன் பிரிவு ஊழியரின் அலைபேசி திருடுபோனது. இதுதொடர்பாக சக ஊழியர் சிவசந்துரு, உடந்தையாக இருந்த தனியார் செக்யூரிட்டி ஊழியர் அஜித்குமாரை கைது செய்தனர். அதேபோல் நோயாளிகளின் உறவினர்களின் அலைபேசிகளை திருடியதாக மருத்துவமனை ஊழியர் ஆறுமுகம், மகன் வடிவேலுவையும் கைது செய்தனர்.
கடையில் திருட்டு
விக்கிரமங்கலம்: இப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி 40, கோவில்பட்டி ரோட்டில் பலசரக்கு கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு கடையின் பின்பக்க தகர ஷீட்டை கழற்றி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த ரூ.40 ஆயிரம் உட்பட சில பொருட்களையும் திருடிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சாவுடன் மூவர் கைது
வாடிப்பட்டி: சமயநல்லுார் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் வயலுாரில் வாகன சோதனை செய்தனர். அப்போது டூவீலரில் கஞ்சாவுடன் வந்த மதுரை முல்லை நகர் வசந்தகுமார் 22, ஆனையூர் அஜித்பிரபு 24, திருமங்கலம் நிசாந்தை 28, கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, ரூ.2030, டூவீலரை பறிமுதல் செய்தனர். மற்றொரு டூவீலரில் தப்பிய தோடனேரி சுந்தரபாண்டியை தேடி வருகின்றனர். இவர்கள் மீது கஞ்சா, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

