ADDED : ஆக 07, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் ‘மூட்டா’ சங்க பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் பொதுக்கல்வியை அழிக்க நினைக்கும் மசோதாவை கைவிட வேண்டும். 8வது ஊதியக்குழு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுக்கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்குவது போல அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கும் இணைப்பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணி மேம்பாடுகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள் சிவசங்கரி, சுரேஷ், தங்கமுத்து, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
