ADDED : மார் 02, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வடக்கு மேட்டுத் தெரு தினேஷ்குமார், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் முதுகலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
திருப்பரங்குன்றம் கீழத்தெரு ஹேம லட்சுமி சவுராஷ்டிரா கல்லுாரியில் பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படிக்கிறார். இருவரும் கல்வி உதவித் தொகை கேட்டு மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதாவிடம் மனு அளித்தனர்.
இருவருக்கும் மண்டல தலைவர் தலா ரூ. 5,000 வழங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் விமல், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.