/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன போக்குவரத்து 3 மணிநேரம் பாதிப்பு உசிலம்பட்டியில் தவிப்பு

ADDED : மே 11, 2024 05:57 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரை மணி நேரம் காற்றுடன் மழை பெய்ததால் மதுரை ரோட்டில் அடுத்தடுத்து இரண்டு புளியமரங்கள் சாய்ந்து 3 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
உசிலம்பட்டியில் நேற்று மாலை 5:15 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 6.20 மணியளவில் மதுரை ரோட்டில் தனியார் வங்கி முன்பாக புளியமரம் சாய்ந்தது. மரத்தின் கீழ் இருந்த 5 டூவீலர்கள், ஒரு கார் சேதமடைந்தது.
மேலும் ரோட்டில் வந்த ஆம்னி வேன் மீது விழுந்ததில் டிரைவர் சமயநல்லுார் தவமணி 42, காயமுற்றார். மரம் சாய்ந்ததில் ரோட்டின் குறுக்கே இருந்த மின்கம்பமும் சாய்ந்து போக்குவரத்து பாதித்தது.
இந்த மரத்தை அப்புறப்படுத்திய சற்று நேரத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் மேலும் ஒரு புளியமரம் சாய்ந்து மீண்டும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் இணைந்து அப்புறப்படுத்தினர். அடுத்தடுத்து மரங்கள் சாய்ந்ததால் மதுரை ரோட்டில் மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை போக்குவரத்து பாதித்தது.
சாயும் நிலையில் மரங்கள்
உசிலம்பட்டி- - மதுரை ரோடு விரிவாக்க பணிக்காக ரோட்டோரத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
மதுரை ரோட்டில் உள்ள மரங்களின் அடிப்பகுதியில் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதால் பிடிமானம்இல்லாமல் மேலும் பல மரங்கள் சாயும் நிலையில் உள்ளன.