/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓராண்டுக்கும் மேலாக நிறுத்திய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்; மாவட்டங்களிலேயே அச்சிட்டு வழங்க அரசு உத்தரவு
/
ஓராண்டுக்கும் மேலாக நிறுத்திய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்; மாவட்டங்களிலேயே அச்சிட்டு வழங்க அரசு உத்தரவு
ஓராண்டுக்கும் மேலாக நிறுத்திய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்; மாவட்டங்களிலேயே அச்சிட்டு வழங்க அரசு உத்தரவு
ஓராண்டுக்கும் மேலாக நிறுத்திய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்; மாவட்டங்களிலேயே அச்சிட்டு வழங்க அரசு உத்தரவு
ADDED : ஆக 14, 2024 12:49 AM
மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர புதிய 'ஸ்மார்ட் கார்டு' வேண்டி பலரும் தினமும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்தோருக்கு ஓராண்டுக்கும் மேலாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வழங்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தனர். கடந்த செப்டம்பரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதையொட்டி அதற்கு சில மாதங்களுக்கு முன்பே புதிய கார்டுதாரர்களின் விண்ணப்பங்களை பெற்றாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் முகவரி மாற்றம், திருத்தம் வேண்டுவோருக்கு உரிய பணிகள் நடந்தன.
இந்நிலையில் மகளிர் உரிமை திட்டம் துவங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், புதிய கார்டுதாரர்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் புதிய கார்டு கேட்டு 12 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க கலெக்டர் சங்கீதா உத்தரவின்பேரில், மாவட்ட வினியோக அலுவலர் ரவிகுமார் நடவடிக்கை மேற்கொண்டார். இதில் தற்போது வரை 2500 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.
மாவட்ட வினியோக அலுவலர் கூறுகையில், ''முன்பு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சென்னையில் பிரிண்ட் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். இம்முறை அந்தந்த மாவட்டங்களிலேயே பிரிண்ட் செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அடுத்த வாரம் முதல் ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவோம். தொடர்ந்து இப்பணி நடத்தப்பட்டு, அவ்வப்போது கார்டு வழங்கப்படும். மற்றபடி திருத்தம், மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகள் எவ்வித தாமதமுமின்றி நடந்து வருகிறது'' என்றார்.