ADDED : மே 11, 2024 05:53 AM

திருப்பரங்குன்றம்: தோப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல்முறை கிடங்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் செல்லத்துரை பேசினார். செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, காளியப்பன், பாண்டி முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் செல்வம் வரவேற்றார்.
ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் சரியான எடையில் வழங்க வேண்டும். பொருட்களை கவர்களில் மூடி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதிகப்படியான அபராதம் விதிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள் அதிக மன உளைச்சலுடன் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். துணைத் தலைவர் சிவபாண்டியன் நன்றி கூறினார்.