ADDED : ஜூலை 27, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: வாடிப்பட்டி, இரும்பாடி கிராமத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இப்பகுதியில் 42 எக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இலைச்சுருட்டு புழு தாக்குதல் குறித்து விவசாயிகள் தெரிவித்ததால் வேளாண் உதவி இயக்குநர் பாண்டி, வேளாண்மை அலுவலர் விக்டோரியா செலாய், மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பார்வையிட்டனர். இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வழிமுறைகளை தெரிவித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி ஒருங்கிணைத்தனர்.
