/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.48 லட்சம்: 40 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: சுதந்திர தினவிழாவில் கலெக்டர் வழங்கினார்
/
ரூ.48 லட்சம்: 40 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: சுதந்திர தினவிழாவில் கலெக்டர் வழங்கினார்
ரூ.48 லட்சம்: 40 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: சுதந்திர தினவிழாவில் கலெக்டர் வழங்கினார்
ரூ.48 லட்சம்: 40 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: சுதந்திர தினவிழாவில் கலெக்டர் வழங்கினார்
ADDED : ஆக 16, 2024 04:35 AM
மதுரை: மதுரையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி 40 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதபடை மைதானத்தில் நேற்று 78 வது சுதந்திர தினவிழா கலெக்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது. முன்னதாக காந்தி மியூசியத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் ஆயுதபடை மைதானத்தில் தேசிய கொடியேற்றினார். பின்னர் திறந்த ஜீப்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி, எஸ்.பி., அரவிந்த், போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, டி.ஆர்.ஓ., சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், ஆர்.டி.ஓ., ஷாலினி, துணை கலெக்டர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு துறையைச் சார்ந்த 317 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.13.95 லட்சம் மதிப்பில் 3 பேருக்கு தொழில் துவங்கவும், தோட்டக்கலைத்துறை சார்பில் தனியார் நாற்றங்கால் மானியம், சிப்பம் கட்டும் அறை அமைப்பது போன்றவற்றுக்கு ரூ.9.5 லட்சம்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 10 பேருக்கு ரூ.16 லட்சத்து 17 ஆயிரம், சமூகநலத்துறை சார்பில் 2 பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை ரூ.3 லட்சம், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் வீட்டுக்கடன் மானியம், முன்னாள் படைவீரர் மகள் திரம நிதியுதவி உட்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் ரூ.1.25 லட்சம் உட்பட மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 25 ஆயிரத்து 816 வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளி மாணவ, மாணவியரின் கண்வர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நாகமலை சிறுமலர் பெண்கள் பள்ளி, அலங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி, ஓ.சி.பி.எம்., பெண்கள் பள்ளி, தத்தனேரி திரு.வி.க.,மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி.
சிக்கந்தர் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எழுமலை பாரதியார் மெட்ரிக்., பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கருப்பாயூரணி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகியவை சார்பில் 1200 மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.