/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
/
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
ADDED : பிப் 25, 2025 08:21 AM

மதுரை; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 400 மீட்டர் செயற்கை தடகள டிராக் அமைப்பதற்கான ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி நடக்கிறது.
ரூ.8.24 கோடி மதிப்பில்செயற்கை தடகள டிராக், அதன் உட்பகுதியில் இயற்கை புல்தரை ஹாக்கி மைதானம் அமைக்க 2024 மார்ச்சில் நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துஉள்ளது. செயற்கை தடகள டிராக் பாதையில் தார்ப்பூச்சு முடிந்த நிலையில் செயற்கை ரப்பர் துகள்கள்ரசாயனப்பசை மூலம் ஒட்டப்படுகிறது.
இரு கட்டங்களாக கருப்புநிற ரப்பர் துகள்கள் இரண்டு நாட்கள் இடைவெளியில் ஒட்டப்பட்டுஉள்ளது. இரண்டடுக்கு கருப்பு துகள் ஒட்டிய பின் கடைசியாக சிவப்பு நிற ரப்பர் நிற ரப்பர் துகள்கள் ஒட்டப்பட்டால் பணிகள் நிறைவடையும். மாணவர்கள் பயிற்சி செய்யும் போது இந்த ரப்பர் துகள்கள் குஷன் போல தாங்கி ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தும்.
அடுத்ததாக நீளம் தாண்டுதல் டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணியும் உட்பகுதியில் ஹாக்கிக்கான இயற்கை புல்தரை அமைக்கும் பணியும் தொடங்கும். மார்ச் இறுதியில் டிராக் தயாரானதும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும்.

