/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்நடைத் துறையில் மீண்டும் சம்பள பிரச்னை
/
கால்நடைத் துறையில் மீண்டும் சம்பள பிரச்னை
ADDED : செப் 05, 2024 03:55 AM
மதுரை ; கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றும் அனைத்துவித தற்காலிக பணியாளர்களில் 400 பேருக்கு ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அனைத்து பணியாளர்கள் கூறியதாவது: கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள், பராமரிப்பு ஆய்வாளர்கள் 6400 பேர் வேலை செய்கிறோம்.
3 அல்லது 6 மாதங் களுக்கு ஒருமுறை அரசாணை வெளியிடப்பட்டு அதன் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.
அரசாணை காலம் முடிந்தவுடன் உடனடியாக புதுப்பிப்பதில்லை. கடந்தாண்டு 4 மாதங்கள் சம்பளம் வழங்கப்படாத நிலையில் ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டு ஜூன் மாதம் வரை சம்பளம் வழங்கப்பட்டது.
கால்நடை மருந்தகங்கள் மருத்துவமனையாக தரம் உயர்த்திய போது வெவ்வேறு அரசாணைகளின் மூலம் 6400 பேருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் 6000 பேருக்கு ஒரே அரசாணை புதுப்பிக்கப்பட்டதால் சம்பளம் பெறுகின்றனர்.
அரசாணை 7, 200, 207ன் கீழ் சம்பளம் பெறும் 400 பணியாளர்களுக்கு புதுப்பிக்கப்படாததால் ஜூலை, ஆகஸ்ட் சம்பளம் வழங்கப்படவில்லை.
அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் ஒரே அரசாணை மூலம் சம்பளம் வழங்குவதோடு ஓராண்டுக்கு ஒருமுறை அரசாணை வெளியிட வேண்டும் என்றனர்.