நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ்.எஸ்.காலனி கிளை சார்பாக பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதா பீடம் அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபத்தில் சமஷ்டி உபநயனம் நேற்று நடந்தது. முதல்நாள் உதகசாந்தி நடந்தது.
கிளை தலைவர் சசிராமன், பொதுச்செயலாளர் கே.ஸ்ரீகுமார், பொருளாளர் குருராஜன், நிர்வாகிள் ராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன்,கிஷோர் குமார், உமா மகேஸ்வரி, மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ ஸ்ரீராம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சீதாராமன், அம்மா கேட்டரிங் கிருஷ்ண ஐயர், கணேஷ் ஸ்டோர்ஸ் சங்கர நாராயணன், மாநில நிர்வாகிகள் சுந்த ரேசன், கணபதி நரசிம்மன், விஸ்வநாதன் ராமநாதன், வனிதா நரசிம்மன், அன்னபூரணி சுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சமஷ்டி உபநயனத்தை செய்து வருவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.