ADDED : செப் 12, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: நீர்வளத்துறை பணி ஆய்வாளர் வரத முனீஸ்வரன் திருநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயின் மண்ணை அனுமதி இன்றி மூன்று லாரிகளில் ஒப்பந்ததாரர் கடத்தினர். லாரிகளை திருநகர் 1வது பஸ் ஸ்டாப் பாண்டியன் நகர் அருகில் நானும் பணி ஆய்வாளர் செந்தில்குமார், பாசன ஆய்வாளர்கள் பாலச்சந்தர், கென்னடி மடக்கிப்பிடித்து, தாசில்தார், தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு துறைகளின் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் கூறி சென்றார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். திருநகர் போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.

