/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கல்
/
பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கல்
ADDED : ஆக 15, 2024 04:45 AM
மதுரை : மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் கனரா வங்கி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வங்கியின் பொது மேலாளர் மோகன் தலைமை வகித்தார். மண்டல அலுவலக துணைப் பொது மேலாளர் பாக்யரேகா வரவேற்றார்.
கனரா வங்கி சார்பில் 'டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி' என்ற பெயரில் ஆண்டுதோறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 5, 6, 7ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம், 8, 9, 10ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 216 பள்ளி மாணவிகளுக்கு ரூ. 8 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகையை கலெக்டர் சங்கீதா வழங்கினார். மண்டல மேலாளர் வேம்பு நன்றி கூறினார். துணை பொது மேலாளர்கள் ஷோபியத் அஸ்தானா, இந்துபூஷன் ஷர்மா, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, ஆதிதிராவிட நல அலுவலர் பால்சாமி, தாட்கோ மேலாளர் செலீனா பங்கேற்றனர்.