நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் 2024-- 26 ஆண்டுக்கான மேலாண்மை குழு தேர்வு நடந்தது.
தலைமை ஆசிரியர் சுஜாதா தலைமை வகித்தார். பர்வையாளராக ஆசிரியர் பழனியப்பன் கலந்து கொண்டார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவராக செல்வி, துணைத் தலைவராக சசிகலா, தன்னார்வலர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதே போல் கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மேலாண்மை குழு தேர்வுக்கு தலைமை ஆசிரியர் கண்மணிமாதா தலைமை வகித்தார். தலைவராக உமல் குத்துாஸ், துணைத் தலைவராக சுதா தேர்வு செய்யப்பட்டனர். பொறியாளர் பக்ருதீன் அலி, காஜா மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்வு செய்யபப்பட்டோர் உறுதி மொழி ஏற்றனர்.

