/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துார்வாரப்படாத கண்மாயால் குடியிருப்புக்குள் புகும் கழிவுநீர்
/
துார்வாரப்படாத கண்மாயால் குடியிருப்புக்குள் புகும் கழிவுநீர்
துார்வாரப்படாத கண்மாயால் குடியிருப்புக்குள் புகும் கழிவுநீர்
துார்வாரப்படாத கண்மாயால் குடியிருப்புக்குள் புகும் கழிவுநீர்
ADDED : பிப் 24, 2025 03:45 AM

புதுார்: மதுரை புதுார் கோசாகுளம் கண்மாய் துார்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்புக்குள் புகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள கோசாகுளம் கண்மாய் பல ஆண்டுகளாக குடிநீர் ஆதாரமாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் இன்றி பாசன வாய்க்கால் வழியாக நீர்வரத்து வந்தது. இந்நிலையில் கண்மாயின் வடக்கில் மஹாலட்சுமி நகர், மேற்கில் காந்திபுரம், கிழக்கில் லுார்துநகர் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாயில் கலக்கிறது.
தற்போது முறையாக துார்வாரப்படாமல் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட காண்மாய் ஆகாயத் தாமரையால் சூழ்ந்து காணப்படுகிறது. காந்திபுரம் பகுதியில் இருந்து வரும் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது.
அப்பகுதியினர் கூறியதாவது: மாநகராட்சி போதுமான குப்பைத் தொட்டிகள் வைக்காததால் பிளாஸ்டிக் கழிவுகள், மாட்டு சாணங்கள் உள்ளிட்டவற்றை கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால் அடைப்பு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் கழிவுநீர் நிரம்பி வீடுகளுக்குள் வந்துவிடும். கழிவுநீருடன் சேர்ந்து உருவாகியுள்ள குப்பை மேடால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் கொசு பெருகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கலெக்டர் வரை புகார் அளித்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மழைக் காலங்களில் கழிவுநீர், குப்பை நாற்றத்திலேயே வசிக்கிறோம் என்றனர்.
கோடையில் நிலத்தடி நீர் பிரச்னையை சமாளிக்க கண்மாயை உடனே துார்வார வேண்டும். கழிவுநீர் செல்லும் வடிகால்களை சீரமைக்க வேண்டும். திடக்கழிவுகளை சேகரிக்க போதிய குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

